Thursday 15 December 2011

ஒரு மாணவனின் பார்வையில் ஆசிரியரின் படைப்பு- கணக்காயன்

ஒரு மாணவனின் பார்வையில் ஆசிரியரின் படைப்பு- கணக்காயன்

கார்முகிலோனின் கவிதை நூல்கள்- கணக்காயன்

கார்முகிலோனின் கவிதை நூல்கள்- கணக்காயன்

கார்முகிலோனின் கவிதை நூல்கள்- கணக்காயன்

கார்முகிலோனின் கவிதை நூல்கள்- கணக்காயன்

கார்முகிலோனின் கவிதை நூல்கள்- கணக்காயன்

கார்முகிலோனின் கவிதை நூல்கள்- கணக்காயன்

கார்முகிலோனின் கவிதை நூல்கள்- கணக்காயன்

கார்முகிலோனின் கவிதை நூல்கள்- கணக்காயன்

மேநிலை மாணவர்களுக்கு வழிகாட்டி அறிவுரை- கணக்காயன்(இ.சே.இராமன்)

மேநிலை மாணவர்களுக்கு வழிகாட்டி அறிவுரை- கணக்காயன்(இ.சே.இராமன்)

மேநிலை மாணவர்களுக்கு வழிகாட்டி அறிவுரை- கணக்காயன்(இ.சே.இராமன்)

பிறந்தநாள் முதலாண்டு வாழ்த்து!

தாய்மை எட்டும் பெருவிழா வாழ்த்து- கணக்காயன்(இ.சே.இராமன்)

மன்றல்நாள் வெள்ளிவிழா மங்கல வாழ்த்து! -கணக்காயன்(இ.சே.இராமன்)

ஓலைச்சுவடிகள்-புத்தக விமர்சனம் கவிஞர் கணக்காயன்

ஓலைச்சுவடிகள்-புத்தக விமர்சனம் கவிஞர் கணக்காயன்

ஓலைச்சுவடிகள்-புத்தக விமர்சனம் கவிஞர் கணக்காயன்

கணக்கில் பிணக்கறுக்கும் திரு ஆரோக்கியதாஸ் அவர்கட்கு வாழ்த்து!

பாட்டு வாத்தியார் புதுவை கேசவதாசஸ் அவர்களுக்குப் பாராட்டு மடல்

திருமண வாழ்த்து -கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

பணிநிறைவு-விடைதரு கவிதை- கணக்காயன்(இ.சே.இராமன்)

எழுஞாயிறு-கவியரஙகக் கவிதை- கணக்காயன்(இ.சே.இராமன்)

Wednesday 14 December 2011

பெண் பெற்ற பெண்பற்றி! கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

கற்பனைத்தேன் பிலிற்றும் எழுத்தாக்கங்கள்!

சிந்தனைத் தெளிவை, படைப்பாற்றலை

பார்த்தவை, படித்தவை, கேட்டவை இவற்றின் மறுபதிவை

படிப்பார் நெஞ்சத்தை ஈர்க்கும் பேராற்றலை

தன்னகத்தே பெற்றிருப்பது உள்ளுந்தொறும்

பெருமகிழ்வு படைப்பவை.

ஆங்கில நூலாசிரியர்களின் வடிக்கும் தன்மை கைவரப் பெற்றிருப்பது
வியந்து பாராட்டத்தக்கது.

பேராழிபோல் ஆங்கிலமும், ஊருணிபோல் தமிழும்
தன் எழுதுகோலால் ஏட்டில் பதிந்தாலும்
அத்துணையும் நெஞ்சிற்கு நிறைவு தருபவையே!

கவிதையோ கதையோ நிகழ்ச்சிக் குறிப்போ
அத்துணையும் வித்தெனத்தோன்றி விருட்சமாய் வளரும் பாங்கு
ஏற்றிப் போற்றத்தக்கது.

தொடர்க! பல்குக! சிறக்க! நிறைக! வாழ்த்துக்கள்!
                                                                           
கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

அடக்கம் பற்றி வள்ளுவர்- கணக்காயன் (இ.சே.இராமன்)

பற்பலவாம் செல்வத்துள் நல்லடக்கம் மாண்புடைத்து

1. உற்றிட்டல் தேவரென ஏத்திடுவர் ஞாலத்தார்
    அற்றிருந்தால் மாத்துயரே அன்னவர்க்க்கு எய்திடுமே!

2. பெற்றமைந்தால் மாச்செல்வம் கொண்டவர்ரய் மன்னிடலாம்.

3. மற்றவரை நல்லோர்கள் மேன்மையால் மேல்வைப்பர்.

4.தோற்றத்தில் இப்பண்பால் மாண்மலையும் குன்றிவிடும்!

5. வற்றாத செல்வர்க்கும் ஈதமைதல் மாச்செல்வம்!

6. சாற்றுகின்ற ஐந்துறுப்பும் நன்றடக்கி வாழ்வோரே
     மாற்றமின்றி    எப்பிறப்பும் நற்காவல் பெற்றவரே!

7. நோற்றிருப்பீர் நாவடக்கம் ஒள்ளியராய் நிற்பீரே!

8. குற்றந்தான் தீச்சொற்கள் நன்றெல்லாம் தீய்த்துவிடும்.

9.நீற்றிருக்கும் தீ கூட இல்லதுவாம் உள்வடுவே!
  சாற்றுகின்ற வன்சொல்லால் ஆம்வடுவோ ஆறாதே!

10. சீற்றத்தை நேரடக்கி கற்றடங்கில் அன்னவரை
      ஆற்றமைக்கும் மாணறத்துத் தெய்வமதே! மன்னுகவே!
    

செம்மொழி தமிழ் -கட்டுரை கவிஞர் கணக்காயன்

செம்மொழி தமிழ் -கட்டுரை கவிஞர் கணக்காயன்

செம்மொழி தமிழ் -கட்டுரை கவிஞர் கணக்காயன்

செம்மொழி தமிழ் -கட்டுரை கவிஞர் கணக்காயன்

செம்மொழி தமிழ் -கட்டுரை கவிஞர் கணக்காயன்

செம்மொழி தமிழ் -கட்டுரை கவிஞர் கணக்காயன்

செம்மொழி தமிழ் -கட்டுரை கவிஞர் கணக்காயன்(இ.சே.இராமன்)

Tuesday 13 December 2011

என் மனைவி வனஜாமணிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்து (12-12-1942)

மூவிருபத்              தொன்பான்சேர்          வாழ்வயது           இன்றுனக்கு!
ஆவிநிகர்                 ஈரிருவர்                      சேயர், தம்             எச்சங்கள்
ஓவியம்போல்      பேரன்மார்                  மூவரொடு,           பேத்தியர்கள்
தேவியர்கள்          நல் ஐவர்,                   ஏத்திமகிழ்             கூட்டுகின்றார்!
பூவிதய                  மாண்மருகி                 காண் இருவர்,   நேர்மருகர்
நாவினிய              ஓண்ணிருவர்            நால்வரொடு        நின்கணவர்
காவியஞ்சேர்     பாச்சொல்லால்        கண்டுரைப்பர்      வாழ்த்தினையே!
ஈவிரக்கம்            ஈகஞ்சால்                     ஒண்தியாக          நன்மனத்தால்
வாவிநீர்போல்  வண்மையால்          வாழ்ந்திடுக            ப்ல்லாண்டே!

                                                     கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

Saturday 10 December 2011

அன்றும்-இன்றும் கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

                                          
                                    
                                 இ.சே.இராமன் & வனஜாமணி(1962)

இ.சே.இராமன்
  பொன்னூர்சேர் நல்லிளங்கா  டொண்பூர்வம் ; 
                                         சீர்நரசிம்     மர்தாத்தா                       
  மன்னுபுகழ்        சேஷாத்ரி     மாண்தந்தை
                                        பட்டம்மாள் நற்றாயே!
 என்னிளவல்     இராஜன்தான் இம்மூவர்
                                       இன்றில்லை என்றாலும்
 நின்றுள்ளார்     என்னுளத்தே! முப்பத்தொன்
                                       பான்ஜூலை    முப்பதாம்நாள்
என்பிறப்பு            காணறுபத்       தீராண்டின்
                                        பிப்ரவரி ஒன்பதாம்நாள்
மன்றலது கண்டனன் நான்! எந்துணையோ
                                      நல்வனஜா சீர்மணியே!
அன்னவரோ  வாழ்கொடைசேர் முக்கூரே!
                                       காண்நரசிம் மராண்டாள்
நன்றமைந்த தாத்தாவும் பாட்டியுமே
                                       நல்லரங்க நாதர்தான்
இன்தந்தை, வெல்ஜெயமும் இலட்சுமியும்
                                     சேர்த்துரைத்தால் ஈன்றதாயார்!
இந்திமொழி ஆசிரியர் சீனிவாசக்
                                       கண்ணனோ அம்மானே!
ஐந்துபேரும் மாண்டிட்டார் என்றாலும்
                                        என்றுமவர் நல்நினைவே!
முன்னொருத்தி மூத்தவளும் பின்னொருத்தி
                                       நல்லிளையல் வாழ்கின்றார்!

வனஜாமணி

உன்னதமாம் நாற்பதின்மேல் ஈராண்டில்
                                        ஈற்றமைந்த ஒண்டிசம்பர்
பன்னிரெண்டாம் நாளதனில் ஈன்றிட்டார்
                                         என்றனையே எம்பெற்றோர்!
என்வாழ்வில் நற்றுணையாய் காண்இராமன்
                                        மூவிருபத் தீராண்டின்
நன்றான பிப்ருவரி ஒன்பான்நாள்
                                        வாய்த்திட்டார் காஞ்சியிலே!

இ.சே.இராமன் & வனஜாமணி

முந்தோன்றல் நல்லமிழ்து பின்வந்தோர்
                                        சீரெழிலி மாண்குழலி,
தென்றலென வாழ்தழலன் என்றநால்வர்
                                       சேயரானார் எங்கட்கே!
தன் விழைவால் வந்திட்ட பரிமளாவும்
                                       சேஷாத்ரி இரத்தினமும்
ஒன்றிநிற்கும் நற்சுபாஷி னிப்பேர்கொள்
                                      மாதவளும், நேரிணைப்பே!
ஐந்தானார் பேத்திகளே! மாண்பவித்ரா
                                      நற்சுகன்யா இன்சரண்யா
பின்னான காயத்ரி, ஸ்ரீநிதியும்
                                      தந்திடுவர் மாமகிழ்வை!
சிந்தையிலே ந்ற்களிப்பை ஈபவர்கள்
                                       வேரான பேரன்மார்!
வென்றுயரும் ஆதித்யன் நல்அரவிந்த்
                                    ஸ்ரீகாந்த் வாழ்வீழ்தே!
அன்றுமுதல் இன்றுவரை ஈண்டுமக்கு
                                   நேர்வைத்தோம் சூழ்கமாணே!

                                                                                      
  கவிஞர் கணக்காயன்(இ.சே.இராமன்) &
வனஜாமணி
(2011)





Friday 9 December 2011

என் வலைபபூவின் தாய் கவிஞர் கணக்காயன்(இ.சே.இராமன்)

என்வலைப்பூ             நற்றந்தை            ஏற்றமிகு                  தில்லியிலே
அன்னவர்பேர்            வேங்கட்ரா          மன்துணைவி       ஆதிலட்சுமி
நன்றமைந்த              நேரிணையோ    நெய்வேலி              கோவையே
ஒன்றுரைத்தார்;-     "என்பேரில்          ஓர்வலைப்பூ          காணவே!"
குன்றுமணி                தன்னளவும்         யானறியா              அத்துறையைத்
தன்னார்வம்             கொண்டறிந்த       தக்கவர்ரம்              சேஷாத்ரி
குன்றனையார்        தம்மிடத்து              கூறிநின்றேன்       என்விழைவை
புன்முறுவல்             பூத்தவரும்               இன்மொழியால்   தாயானார்
தந்தையார்                ஈந்தகரு                    நற்பாண்டி              சீர்புதுவை
தன்னில்தான்          மாணுருவை          தான்பெற்று           சுற்றுலாவைத்
தென்றலெனக்        காண்கிறது              எவ்வெவரும்        தாம்கண்டு
மினனஞ்சல்            தன்வழியே              என்றனுக்குத்        தன்கருத்தைத்
தந்தென்னை           ஊக்குகின்றார்        தள்ளரிய                 நல் அமிழ்து
நன்மழைபோல்     சீரெழிலி                    நாநலத்து                மாண்குழலி
வென்றுலவு           நற்றழலன்              தேக்குகின்ற           நல்மகிழ்வை
ஐந்தான                     இப்பூவும்                  பையலென            ஈகிறது!
நன்மணிசேர்         தாமரைதான்             நற்றுணையாய் வாய்த்ததனால்
பன்னலமும்          என்றனுக்குப்            பாங்காகச்              சேர்கிறது
பொன்னணியில் நேர்பதித்த                பன்மணிபோல்     சேஷாத்ரி
நன்றமைந்த           தாயதனால்              நன்றிதனை           வைப்பேனே

                                                                      -கவிஞர் கணக்காயன்(இ.சே.இராமன்)

அன்றாட வாழ்வில் அறிவியலின் பயன்கள்

முன்னுரை:-
    
                   எழுவது முதல் விழுவது வரை அன்றாடம் நம் செயல்பாடுகளில் அறிவியலின் பயன்பாடு நீக்கமற நிறைந்திருப்பதில் எட்டுணையும் ஐயமில்லை. விழித்தவுடனேயே தேவைப்படும் நீர் முதல் உறக்கத்தின் போது தேவைப்படும் கொசு, மூட்டைப்பூச்சி நீக்கிவரை விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் இல்லாமல் எந்த நாளும் கழிவதில்லை. இவற்றின் எண்ணிக்கை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக பல்கிக் கொண்டே செல்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக இப்பொழுது விரிவாகக் காண்போம்.

நீர்:- வெளியில் செல்வது, பல் துலக்குவது, முகம் கழுவுவது,நீராடுவது, துணி துவைப்பது, பாத்திரஙகள் துலக்குவது, அரைப்பது, கரைப்பது, சமைப்பது இப்படி தொடர் பணிகள் அத்தனைக்கும் நீர், குளிர்நீர், வெந்நீர் போன்றவைகள் தேவைப்படுவதால் அவற்றிற்குரிய விஞ்ஞான சாதனங்களின் தேவையும் அவற்றின் பயன்பாடும், அவை குறையுடையவையாயின் அவற்றை செப்பம் செய்யும் முறைகளும் நாம் அறிந்திருப்பது இன்றியமையாததாகும்.

உண்டி:- சிற்றுண்டி, பேருண்டி எதுவாயினும் அவை கலப்புணவாக, சரிவிகித உணவாக, ஊட்டம் மிக்கதாக, உண்ணத்தக்கவையாக, உடலுக்கு ஊறு விளைவிக்காததாக, காலத்தால் அளவாக பசித்து புசிப்பதாக, வலிமை சேர்ப்பதாக, நோய்களுக்கு காரணம் இல்லாததாக, வயதுக்கும், தட்பவெப்ப நிலைக்கும் தக்கதாக அமைய அறிவியல் அறிவு இன்றியமையாததாக அமைகின்றது.

உடை:- மானங்காப்பதாக, தளர்வோ, இருக்கமோ, மிகுதியாக இல்லாததாக, தட்பவெப்ப நிலைகளால் குளிர் நடுக்கமோ, வெப்ப வியர்வை மிகையோ உடலில் தோன்றா வண்ணம் அமையும் உடுப்புக்கள், எளிதில் தீப்பிடிக்காத, சீக்கிரம் உலர்ந்து விடுவதாக அந்தந்த சமயங்களுக்கு ஏற்ற உடுப்புக்கள், பருத்தி பட்டு, கம்பளி போன்ற வகைப்பாடுகள் அறிந்து உடுத்த அறிவியல் மிகப் பயன்பாடு மிக்கதாகும்.

உறையுள்: -கூரையோ தளமோ சிறு பெரு சந்துகல் அற்றதாக கசிவு இல்லாததாக ஓதம் அற்றதாக இதே குறைகள் சுவர்களில், தரைகளில் இல்லாததாக, பலகணிகள், கதவுகள் தேவைப்படும்போது திறக்கவும், தேவை இல்லாத போது நன்கு மூடவும் தக்கவையாக, ஊதக்காற்று உள்வராததாக, கொசு, பூச்சிகள் போன்றவை வீட்டிற்குள் நுழையாதபடி பாதுகாப்பானதாக அமைய, வந்துவிட்டால் நீக்குவதாக இவற்றை அறிந்து செயல்பட அறிவியல் பெரிதும் தேவைப்படுகிறது.

மின் சாதனங்கள்:-  தூசு நீக்கி, ஈரம் அகற்றி, ஒட்டடை போக்கி போன்றவை பயன்படுத்தாத இல்லங்களே இல்லை என்ற அளவுக்கு அனைத்து மாதற்கும், பணியாட்களுக்கும் தேவையானதாகவும், அவை குறையுடைத்தாயின் அவற்றை செப்பம் செய்யும் முறைகள் அறிதல் இவை அறிவியல் அன்றாடம் பயன்படுத்தலின் நிலையைப் பெரிதும் உணர்த்தும்.

மருந்து:-  நோய் வருமுன் காக்கவும், வந்த பின் போக்கவும், இன்று வீரிய மருந்துகள், பக்க விளைவுகள் ஏற்படுத்தாவண்ணம் புதிது புதிதாய் தேவைப்படுகின்றன.புதிய நோய்கள் பல்கியதாய்ப் படை எடுக்கின்றன.மருத்துவர் கற்காப் பிணிகள் பற்பல தோன்றி அவர்களையே அச்சுறுத்துகின்றன. மனிதனின் புறத்தும் அகத்தும் உள்ள உறுப்புகட்கு தனித்தனியே நுணுகிக் கற்ற வைத்தியர்கள் இன்று பற்பலர். பிறப்பு விகிதத்தை கட்டுக்குள் வைத்து, இறப்பு விகிதத்தை நன்று குறைத்திட பலரும் முயற்சித்து வருகின்றனர். அவர்களின் அறிவுரைகளை சமுதாயம்
முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

தோட்டக்கலை, உழவு:- வித்து முளைக்க, துளிர் விட,பூக்க,காய்க்க, பழுக்க,பூச்சி, புழு அரிப்பு அணுகாது காக்க அறிவியல் அன்றாட வாழ்வில் பெரிதும் தேவையாகிறது. ஊட்டமுள்ள கீரைகள், காய்கள், பழங்கள், காய்கறிகள் நாம் பெற்றுப் பயன்பெற விஞ்ஞானம் தேவையாகிறது.

தொழில்:- எந்தத் தொழிலானாலும் அதைச் சார்ந்த தொழிற்சாலைக்கு இயந்திரங்கள் தேவைக்கு அறிவியல் துணை நிற்க வேண்டும். திறன் மிக பொருள்கள் உற்பத்தி பெருக, குறுகிய கால்ம் குறைந்த செலவில் தரமான கண்டு முதல் கண்டு பொருளாதார வளர்ச்சி பெற அறிவியலாலர்களின் நுண்ணறிவு, தொடர்முயற்சி, புதிய கண்டுபிடிப்புகளின் அணிவகுப்பு இவற்றிற்கு விஞ்ஞானத்தின் பயனபாடு தொடர்ச்சியான, இன்றியமையாத தேவையாக அமைகின்றது.

இசை, இசைக்கருவி:- கவலையை மறக்க, மகிழ்ச்சி அடைய இசை, மெல்லிசை,இன்னிசை, கருவி இசை, பஜனை, கர்நாடக இசை, காலட்சேபம், ஹரிகதை, வில்லிசை, கீழ்நாட்டு மேல்நாட்டு இசைக்கருவிகள், இசைத்தட்டு, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம்,நாட்டியம், நுண்கலைகள், சின்னத்திரை, நாடகம் இவற்றிற்கு தேவைப்படும் கருவிகள் காண விஞ்ஞானம் தேவை.

தகவல் அறிய:- செல்பேசி, தொலைபேசி, கணினி,மடிக்கணினி, மின்னஞ்சல், வலைப்பூ, தினசரிகள்,வாரம் மும்முறை,இருமுறை,ஒருமுறை, மாதம் மும்முறை,இருமுறை,ஒருமுறை, காலாண்டு, அரையாண்டு இதழ்கள், ஆண்டுமலர்கள், சிறப்பு நாட்கட்கான மலர்கள் இவைகளை நாம் பெற்றுத் துய்க்க பல கருவிகள், இயந்திரங்கள் தேவைக்கு அறிவியலை நாம் துணை கொள்ள வேண்டும்.

ஓய்வு:- ஓய்வு நேரத்தைப் பயனுள்ள முறையில் கழித்து மன நிறைவு பெற, மகிழ மகிழ்வூட்ட, பலருடன் கலந்து அனுபவிக்க, மழலைகளோ, மூத்து முதிர்ந்தோரோ, ஆடவரோ, மாதரோ எத்திறத்தார் என்றாலும் ஒள்ரிவனவும், வெளிச்சம் தருவனவும், புழுக்கம் போக்குபவையும் அறிவியலின் கொடைகளே!

சுற்றுச் சூழல்:- சுற்றுச் சூழலின் தட்ப வெப்பத்தை சமனப்படுத்தத் தேவையான இய்ந்திரங்கள் இன்றீயமையாதவை ஆகின்றன. அவற்றைப் பெற அறிவியல் பெரிதும் தேவையாகிறது. நம்முடைய தேவைக்கு வசதிக்கு தேவைகள் பற்பல. இவை இன்றைய நவீன சூழலில் பெரிதும் வேண்டப்படுகின்றன. அறிவியலின் கொடைகளாலேயே இவை ஈடுகட்டப் படுகின்றன.

போக்கு வரத்து சாதனங்கள்:-
பூமியில் பாலையில் கடற்கரையில் நீர் மீது நீருள்ளே,வானில், மலைமீது அடர்காட்டில், நிலவில் செவ்வாயில் என்று மக்கள் பயணிக்க இருப்புப்பாதை ஊர்திகள், அதிவிரைவு மெட்ரோ, மோனோ தொடர் ஊர்திகள் இப்படி யாவினுக்கும் அறிவியலின் பயன்பாடு அன்றாடம் தேவைப்படுகிறது.

முடிவுரை:-
            இவை என் சிற்றறிவுக்கு எட்டிய சிலவே. ஆனால் மேலும் பற்பல உள்ளன. அவரவர் சிந்தையில் எண்ணில தோன்றும். அந்தந்த துறை சார்ந்த அறிஞர்கள், புத்தமுதாய்ப் பட்டியலிடுவர். கிட்டிய வர பெற்று வாழ்வில் உயர்வோமாக.

                                -கவிஞர் கணக்காயன்(இ,சே.இராமன்)

Thursday 8 December 2011

தன் கவிதை பற்றி- கவிஞர் கணக்காயன்

ஒரு காலைகோழியின் கூவலே தவிர,
கானப் புள்ளின் இன்னிசை அல்ல;

குட்டி ஓவியனின் கிறுக்கலே தவிர,
கோலமயிலின் ஆடலும் அல்ல;








கானல் நீற்றுக் காட்சியே தவிர,
காவிரிப் பொன்னீர் ஓட்டமும் அல்ல;
குழவியர் மணற்காற் பொதிந்த சிற்றிலே தவிர,
பொறிவலர் எழுப்பிய எழிற்மாடக் கூடமும் அல்ல;
கன்னி முயற்சி, குழந்தையின் மழலை,
பிள்ளைக் கடிப்பு, பிஞ்சின் உதைப்பு,
சேயின் சிரிப்பு
இலக்கணத் தொட்டிலில் வளர்ந்த
இலக்கிய மதலை அல்ல,
உள்ளத்தே ஓங்கிய ஆர்வ எழுச்சியின்,
உதட்டின் வெடிப்புக்களே இவை.

Wednesday 7 December 2011

என் வலைப்பூவின் தந்தை

ஓர்மன்றல்       தில்லியிலே,               ஒண்விருந்து                 அன்றிரவு!
ஆர்வத்தால்    சென்றிருந்தேன்,        எந்துணையின்          சுற்றத்தார்,
ஈர்த்திட்டார்      பேரன்பால்,               இன்சொல்லால்,  புன்னகையால்!
"ஊர்கூடி            தேரிழுக்கும்                தன்மை"போல்             பல்கினரே
ஓர்மனங்கொள் நட்பினர்கள்!         ஓதிட்டால்                     பன்னூற்று
ஏர்மிக்க               மாதராரும்,                 ஏற்றங்கொள்                 ஆடவரும்,
கோர்வையாய் வாழ்த்திட்டார்,       கோலம்சால்          அந்நிகழ்வில்!
கூர்த்தமதி           வெங்கட்நா             கராசப்பேர்                    நட்பாசான்,
கீர்த்திமிகு          பண்பாளர்                  கிட்டிட்டார்!             என்றன்னை
சீர்மிக்கார்           சூழலிலே                 இன்னுறவு              யான்பெறவே,
சார்ந்திடுக         ஒண்வலைப்பூ!    சஞ்சரிப்பீர்              ஞால்மென்றார்!
சேர்ந்திடற்கு     யானறியேன்!        என்னதது                 அவ்வலைப்பூ?
தேர்ந்தநல்சொல் சிக்கனத்தால்     என் ஐயம்              போக்கிட்டார்!
என்வலைப்பூ    தந்தையாய்             என்னுளத்தே              நேர்பதிந்தார்!
என்னவகைப்     பூஈது?                       உண்வகையோ?      பூண்தரமோ?
எத்தகைத்து        இவ்வலையே?   மீனவரின்                   தோள்மேற்றோ?
நித்திரையை      மேவவிடா             பல்கொசுவின்            தடுப்போ?
என்றையம்          பல்கியது!             தாதைபோல்              நன்றுரைத்தார்!
வேங்கடத்தார்  நாகராசர்              வித்திட்டார்                  என்நெஞ்சில்!
அன்னவர்க்கு என்நன்றி!              மற்றுஅவர்                  வாழ்வலைப்பூ
நேயரெலாம்    என்னாக்கம்          கண்டுரைத்தார்         தம்கருத்தே!
பாரகத்தே           முன்னிருத்தும்    பாசமிகு                        எந்தையே!

Monday 5 December 2011

கணக்காயன் ( இ.சே.இராமன்) என்னைப் பற்றி KANAKKAYAN PROFILE

21ம் நூற்றாண்டுக்கு வரவேற்புக் கவிதை WELCOMING 21ST CENTURY -POEM BY E S RAMAN

இயற்கை (NATURE)- கணக்காயன் கவிதை (E.S.RAMAN)

என்னைப் பற்றி நான் ரோஜா ennaippatri naan- rosaa கணக்காயன்

"ழ"கரம் தமிழுக்குச் சிகரம்- கணக்காயன் கவிதை

கடல் அலை கவிதை (kadal alai -poem) கணக்காயன்

நூன்முகம் -( அகர வரிசை அறிவுரைகள்)Noonmugam(akaravarisai arivuraikal)

அகர வரிசை அறிவுரைகள் (akara varisai arivuraikal) கணக்காயன்

அகர வரிசை அறிவுரைகள் (தொடர்ச்சி)-கணக்காயன்

வழி தவறிய குழந்தை -கணக்காயன் vazhi thavariya kuzhanthai