Thursday 8 December 2011

தன் கவிதை பற்றி- கவிஞர் கணக்காயன்

ஒரு காலைகோழியின் கூவலே தவிர,
கானப் புள்ளின் இன்னிசை அல்ல;

குட்டி ஓவியனின் கிறுக்கலே தவிர,
கோலமயிலின் ஆடலும் அல்ல;








கானல் நீற்றுக் காட்சியே தவிர,
காவிரிப் பொன்னீர் ஓட்டமும் அல்ல;
குழவியர் மணற்காற் பொதிந்த சிற்றிலே தவிர,
பொறிவலர் எழுப்பிய எழிற்மாடக் கூடமும் அல்ல;
கன்னி முயற்சி, குழந்தையின் மழலை,
பிள்ளைக் கடிப்பு, பிஞ்சின் உதைப்பு,
சேயின் சிரிப்பு
இலக்கணத் தொட்டிலில் வளர்ந்த
இலக்கிய மதலை அல்ல,
உள்ளத்தே ஓங்கிய ஆர்வ எழுச்சியின்,
உதட்டின் வெடிப்புக்களே இவை.

9 comments:

  1. உள்ளத்தே ஓங்கிய ஆர்வ எழுச்சியின்,
    உதட்டின் வெடிப்புக்களே இவை.//
    இது போதும் கவிதையின் அழகு சொல்ல

    ReplyDelete
  2. நல்ல கவிதை... அழகாய் இருக்கிறது...

    ReplyDelete
  3. இலக்கணத் தொட்டிலில் வளர்ந்த
    இலக்கிய மதலை அல்ல,
    உள்ளத்தே ஓங்கிய ஆர்வ எழுச்சியின்,
    உதட்டின் வெடிப்புக்களே இவை.


    ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அனுபவத் தமிழுக்கு அரும்பின் வணக்கம்.

    ReplyDelete
  5. அருமையான வரிகள் ஐயா!
    பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  6. அனைவருக்கும் நன்றீ-கணக்காயன்

    ReplyDelete
  7. அழகான வரிகள் ஐயா.

    ReplyDelete