Saturday 10 December 2011

அன்றும்-இன்றும் கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

                                          
                                    
                                 இ.சே.இராமன் & வனஜாமணி(1962)

இ.சே.இராமன்
  பொன்னூர்சேர் நல்லிளங்கா  டொண்பூர்வம் ; 
                                         சீர்நரசிம்     மர்தாத்தா                       
  மன்னுபுகழ்        சேஷாத்ரி     மாண்தந்தை
                                        பட்டம்மாள் நற்றாயே!
 என்னிளவல்     இராஜன்தான் இம்மூவர்
                                       இன்றில்லை என்றாலும்
 நின்றுள்ளார்     என்னுளத்தே! முப்பத்தொன்
                                       பான்ஜூலை    முப்பதாம்நாள்
என்பிறப்பு            காணறுபத்       தீராண்டின்
                                        பிப்ரவரி ஒன்பதாம்நாள்
மன்றலது கண்டனன் நான்! எந்துணையோ
                                      நல்வனஜா சீர்மணியே!
அன்னவரோ  வாழ்கொடைசேர் முக்கூரே!
                                       காண்நரசிம் மராண்டாள்
நன்றமைந்த தாத்தாவும் பாட்டியுமே
                                       நல்லரங்க நாதர்தான்
இன்தந்தை, வெல்ஜெயமும் இலட்சுமியும்
                                     சேர்த்துரைத்தால் ஈன்றதாயார்!
இந்திமொழி ஆசிரியர் சீனிவாசக்
                                       கண்ணனோ அம்மானே!
ஐந்துபேரும் மாண்டிட்டார் என்றாலும்
                                        என்றுமவர் நல்நினைவே!
முன்னொருத்தி மூத்தவளும் பின்னொருத்தி
                                       நல்லிளையல் வாழ்கின்றார்!

வனஜாமணி

உன்னதமாம் நாற்பதின்மேல் ஈராண்டில்
                                        ஈற்றமைந்த ஒண்டிசம்பர்
பன்னிரெண்டாம் நாளதனில் ஈன்றிட்டார்
                                         என்றனையே எம்பெற்றோர்!
என்வாழ்வில் நற்றுணையாய் காண்இராமன்
                                        மூவிருபத் தீராண்டின்
நன்றான பிப்ருவரி ஒன்பான்நாள்
                                        வாய்த்திட்டார் காஞ்சியிலே!

இ.சே.இராமன் & வனஜாமணி

முந்தோன்றல் நல்லமிழ்து பின்வந்தோர்
                                        சீரெழிலி மாண்குழலி,
தென்றலென வாழ்தழலன் என்றநால்வர்
                                       சேயரானார் எங்கட்கே!
தன் விழைவால் வந்திட்ட பரிமளாவும்
                                       சேஷாத்ரி இரத்தினமும்
ஒன்றிநிற்கும் நற்சுபாஷி னிப்பேர்கொள்
                                      மாதவளும், நேரிணைப்பே!
ஐந்தானார் பேத்திகளே! மாண்பவித்ரா
                                      நற்சுகன்யா இன்சரண்யா
பின்னான காயத்ரி, ஸ்ரீநிதியும்
                                      தந்திடுவர் மாமகிழ்வை!
சிந்தையிலே ந்ற்களிப்பை ஈபவர்கள்
                                       வேரான பேரன்மார்!
வென்றுயரும் ஆதித்யன் நல்அரவிந்த்
                                    ஸ்ரீகாந்த் வாழ்வீழ்தே!
அன்றுமுதல் இன்றுவரை ஈண்டுமக்கு
                                   நேர்வைத்தோம் சூழ்கமாணே!

                                                                                      
  கவிஞர் கணக்காயன்(இ.சே.இராமன்) &
வனஜாமணி
(2011)





5 comments:

  1. அற்புதம்-இராமசாமி புதுவை

    ReplyDelete
  2. படமும் சிறப்பான கவிதையும் அழகா இருக்கு.

    ReplyDelete
  3. கவிதையாக உங்கள் குடும்பத்தினரை அறிமுகம் செய்திட்டீர் - மிக நன்று...

    ReplyDelete
  4. தலைப்புகளுடன் அறிமுகம் அருமை அருமை

    தொடர்க உங்கள் கவிதை

    பவித்ரா

    ReplyDelete
  5. கவிதை மூலம் தங்கள் குடும்பத்தினரை தெரிந்து கொண்டோம். அருமை ஐயா.

    ReplyDelete