Monday 13 January 2014

பொங்கல் வாழ்த்து - கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)


பொங்கல் வாழ்த்து




   உழவர்                பெருநாள்!               தமிழர்                  திருநாள்!
   அழலனை          ஞாயிறுக்               கடிசில்                  படைநாள்!
   உழவினுக்         குதவிய                  பெருவலி             காளையும்
   குழவியாம்        அஃதின்                    சீரடிக்                     கன்றும்
   பழம்,பால்          பொங்கல்               கரும்பொடு         செந்நெல்
   சூழநின்                றேத்துவர்              குழலியர்,              தம்முடை
   குழவியர்            சுற்றமொடு           பழகியோர்            பல்கிட
   அழகாம்               இயற்கை              முருகின்               அருளால்
    வாழிய                 நிலனே!                வளத்தொடு         நீயும்!
    வாழியே              நீவிர்                       குறள்வழி            நின்றே!


                                  -கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

பட உதவி:கூகிளுக்கு நன்றி!





14 comments:

  1. தித்திக்கும் தைப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

      Delete
  2. அருமையான கவிதை ஐயா. தங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

      Delete
  3. குறள்வழி நின்றே! வாழ வாழ்த்தும்
    அருமையான கவிதை.. பாராட்டுக்கள்..!

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

      Delete
  4. சிறப்பானதொரு கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.
    -----
    தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா

    சிறப்பான பொங்கல் கவிதை சர்க்கரைப்பொங்களின் சுவையை விட தங்களின் கவிதையின் சுவை நன்று

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
    ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies



    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

      Delete
  7. சிறப்பான கவிதை....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete