Saturday 30 March 2013

ஓவியத்திற்கு கவிதை-கவிஞர் கணக்காயன்


வலைப்பூ அன்பர்களுக்கு என் இனிய காலை வணக்கங்கள்!
நீண்ட இடைவெளிக்குப் பின் திரு.வெங்கட் நாகராஜ் அவர்களின் அழைப்பினை ஏற்று ஒரு கவிதை படைத்துள்ளேன்!



சிற்றூரின்           நீள்சாலை,             ஓர்பக்கம்                        நன்நீழல்

சுற்றுமுள          ஓங்குமரம்,            சுந்தரியாள்                    அங்கமர,

பற்றோடும்        ஈரன்னம்,               பக்குவமாய்                 நீருணியில்,

நற்றவமே         ஆற்றல்போல்,     தம்மன்பை                  நேர்பகிர்ந்து,

புற்றரையின்   மாதினுக்கு            புத்திமதி                        சொல்கிறதோ?

வற்றாத             நல்லுறவு              வாகாகப்                        பெற்றிடற்கே!


காற்றாலே       ஊருணியின்        நீர்ப்பரப்பில்                 காண்சலனம்,

ஏற்றாற்போல் தாமரைப்பூ          கூம்பியவை                சற்றசைவு,

ஆற்றாமை      நெஞ்சத்தே,         ஆறலைக்கும்             எண்ணங்கள்

சேற்றினிலே   வாழ்தவளை     சேர்த்தொலிக்கும்     சத்தங்கள்,

தோற்றமாம்    பல்மீன்கள்          ஒக்கனவாய்               நீந்துமெழில்,

தேற்றத்தைத் தந்திடுமோ           ஏந்திழைக்கு             இச்சூழல்?

மாற்றமிலா     ஏமாற்றம்            மாணிழைக்கு           எஞ்சிடுமோ?
                

                                                                         -கவிஞர் கணக்காயன்.

6 comments:


  1. காற்றாலே ஊருணியின் நீர்ப்பரப்பில் காண்சலனம்,

    ஏற்றாற்போல் தாமரைப்பூ கூம்பியவை சற்றசைவு,

    அருமையான கவிதை வரிகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  3. ரொம்ப பெரியவரு நீங்க..
    \
    நானே தாத்தா. என்னைவிட ஒரு மூணு வயசு பெரியவங்க நீங்க..

    வணக்கமுங்க..

    இன்னா பாட்டு அப்படியே வந்து உங்க முன்னாடி வந்து
    சேவிக்கணும்போல கீது.

    தமிழ் வார்த்தைகள் சும்மா சொல்லக்கூடாது அண்ணே.

    கொஞ்சுதுங்க...

    ஒரு பாட்டு போட்டிருக்கேங்க...

    கேளுங்க...

    உங்களுக்கு இ மெயில் லே அனுப்பிச்சும் இருக்கேன்.
    நல்லா இருந்தா சொல்லுங்க.. யூ ட்யூபிலே போடுவோம்.
    ஊர் உலகம் எல்லாமே கேட்கட்டும்.

    எங்கன இருக்கீக... சென்னையிலா.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா! தாங்கள் பாடிய விதம் அருமை! மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்! நன்றி!

      Delete
  4. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா.

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்றுபார்வையிட முகவரி.
    http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_16.html?showComment=1408144560192#c7901132577909697036

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete