புகழ்"அரச கட்டளை"யால் பூத்த விஜய!
பகலிரவு பாராத "அன்பே வா"வா!
அகமெல்லாம் பதிந்திட்ட "ஆசை முகம்"நீ!
"ஆயிரத்தில் நீஒருவன்"! ஆதவனே போல்வாய்!
"இரகசிய போலீசா"ய் இருள்மனத்தோர் அஞ்ச,
"எங்கவீட்டுப் பிள்ளை"நீ! "எங்கள் தங்கம்"!
"என் அண்ணன்" "ஒளிவிளக்" கென்பார் பல்லோர்!
"என் கடமை" வழிநடத்தல் என்றே கொள்வார்!
"கணவன"வன் நல்லன்பின் கன்னிக் கலைக்கே!
"கலங்கரை நேர்விளக்கம்" கண்ணியத் தோழர்க்கே!
"கன்னித்தாய்" போல்வான்நம் கற்புநிறை தம்பியர்க்கே!
"காவல்கா ரனா"வான் கள்ளினம் கொள்வார்க்கே!
தான்"குடியிருந் தஓர்கோயில்" தள்ளாதே வாழ்த்தி,
சீர்"குமரிக் கோட்டத்"தே சிந்தை கொள்ளாய்!
"ச்க்ரவர்த் தித்திருமகட்" சீர்மேவும் வல்லான்!
"சந்திரனின் உதய"மாய்ச் சங்கமித்த நல்லோய்!
வ்ந்தனையால் சீர்"தலைவனாய்" வந்தவரே வாழ்க!
தன்"தாயின் மடியில்"தான் கற்றபடி நிற்போய்!
திரைமகளின் "தாலிபாக்யன்" தாம்நும் மறுபிறவி!
"தெய்வத்தாய்" பெற்றெடுத்த தேவமகன் போல்வீர்!
தென்திரைப்பெண் வான்காதல் "தேடிவந்த மாப்பிள்ளை"!
தலைமகனாய்க் கலைமகட்கே "தொழிலாளி" ஆனோய்!
"நம்நாடு" நேருறவே நாளெல்லாம் உழைப்போய்!
"நாடோடி" நீயெனினும், "நாடோடி மன்னன்"!
"நான் ஆணை யிட்டால்" நன்றாகும் என்றோய் !
"படகோட்டி" "பணக்காரக் குடும்ப"மென எண்ணாய்!
"பணத்தோட்டம்" "பணம்படைத்தவன்" பங்குக்கே என்றாய்!
"புதியபூமி" சின்னவர் பூத்திடும் செய் என்றாய்!
"பெரியைடத்துப் பெண்"என்றால் பேருக்கே "மகாதேவி"!
"மாட்டுக்கா ரவேலன்"நீ! மண்டியதே "முகராசி!"
"விவசாயி" நட்டார்க்கு! "வேட்டைக்கா ர"னாவாய்நீ
தவறிழைக்கும் மாந்தர்க்கே! தண்தமிழாய் வாழ்வாயே!
புலவர்பா நாயகனாம் பொன்மனச்செம் மல் என்கோ?
நிலவுபுகழ் பாரி என்கோ? நீண்நிலத்து மாரிஎன்கோ?
புரட்சிநடி கரென்கோ? பிறர்க்குரியா ளரென்கோ?
பொன்னியாய்நற் பைந்தமிழாய்ப் பாரகத்தே
நின்றிடுநல் அண்ணாபோல் நீள்நிலத்து நீடுகவே!
-கவிஞர் கணக்காயன்( இ.சே.இராமன்)
அருமை ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி ஐயா!
Deleteஅருமை ஐயா
ReplyDeleteஎம்.ஜி.ஆர் என்றும் வாழ்வார்
தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி ஐயா!
Deleteஎம்.ஜி.ஆர். நடித்த படங்களின் பெயர்களாலேயே ஒரு அருமையான கவிதை....
ReplyDeleteரசித்தேன்.
தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete