Tuesday 31 December 2013

புத்தாண்டு 2014- நல்வாழ்த்து! -கவிஞர் கணக்காயன்(இ.சே.இராமன்)



பத்திரண்டு          நூறோடும்              ஏழிரண்டும்                 சேர்ந்தமைந்த
புத்தாண்டு           தோற்றந்தான்       இந்நன்னாள்               இன்றிதனை
கத்துகடல்           சூழுலகின்                நாடெல்லாம்             ஏற்கின்றார்!
உத்தமனாம்       வள்ளுவனின்       ஆண்டென்றால்         முப்பத்து
நான்கிதனின்     மிக்கதுவாம்!          முஸ்லீம்கள்            ஆண்டென்றால்
சுத்தமதாய்         ஈரேழ்நூற்                றைஏழே!                    நல்விஜய
ஏத்துகின்ற         மார்கழியின்           பத்தோடேழ்               நாளின்று!
மெத்தநல்ல      மாண்புதனே!          நல்லனுமன்              போற்றிநாளே!
நாயனாரில்       சாக்கியரும்             வாயிலாரும்             இன்னாளே!
சித்தமெலாம்    நன்மகிழ்வும்          சிந்தனையில்           மாணருளும்
நத்திடவே          பல்லோரும்              நற்செயல்கள்         நேராற்றி
மன்னிடுக           நின்வாழ்வு               நும்மில்லம்             சுற்றத்தார்
நட்பினரும்         எல்லோரும்             நன்றாற்றி                வாழியரே!


-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

12 comments:

  1. புத்தாண்டு வாழ்த்து அருமை!

    ReplyDelete
  2. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  3. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  4. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் - இயற்கை எய்திய இயற்கை விஞ்ஞானி மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்...

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-1.html

    அன்புடன் DD

    ReplyDelete
    Replies
    1. நம்மாழ்வார் ஐயா அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

      Delete
  5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_7028.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி ஐயா!

      Delete
  6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete