Saturday, 15 September 2012

இமை! -கவிஞர் கணக்காயன்


இமை!

கண்அனைய        கேள்வருக்கு காண்இமையே நன்மனைவி!
அண்ணனுக்குத் தம்பியரும்      அங்ஙனமே         நேரமைவர்!
மண்ணாளும்       சீர்முதல்வர்    மாண்பிரதமர்      அன்னவர்க்குத்
திண்ணமாக          நிர்வாக            ஊழியர்கள்            அத்தகையோர்!
வாழ்மதலை         யாவர்க்கும்     தாய்தந்தை           அப்படியே!
கண்ணிரண்டைக்   காப்பதுவும் மேல்கீழாம்         சீரிமையே!
கண்ணுக்குள்       பாவையாய்     கண்டிடுவோம் பெண்ணிணத்தை!
கண்இமையார்    தேவரெனல்    கற்பனையோ?   உண்மையோ?

-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

6 comments:

  1. நல்ல கவிதை... மீண்டும் வந்து கவி படைத்ததற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய வலைப்பூவில் "சித்தி" கவிதை! படிக்க வேண்டுகிறேன்!

      Delete
  2. உங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  3. கண்ணுக்கு இமையாய் அமைந்து மனத்துக்கும் மாண்புக்கும் உரியவரைக் காக்கும் பொறுப்பைக் கொண்ட உறவுகளைக் குறிக்கும் கவிதையூடே கண்ணின் மணியாய்ப் பெண்ணினம் போற்றும் பெருமையைக் குறித்தமைக்குப் பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  4. தங்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  5. என்னுடைய வலைப்பூவில் "சித்தி" கவிதை!

    ReplyDelete