நன்றி மடல்!
பொன்மனத்தீர்! நட்புளத்தீர்! பொங்கல்நாள் வாழ்த்தளித்தீர்!
பன்நலமும் வாய்த்திடுக! பார்போற்ற உயர்ந்திடுவீர்!
இந்தமிழாய், வண்குறளாய், இசையோடு நிலைத்திடுவீர்!
செந்நெல்லும், நற்கரும்பும் செய் உயர்த்தல் போல்;நும்மில்
முன்னோரும் பின்னோரும் மூதின்பம் கொண்டிடுக!
தென்குலப்பெண் மஞ்சளென, தேர்ந்தசுவை இஞ்சியென,
மென்பாட்டாய், நற்கவியாய், மென்காற்றாய், நன்மழையாய்
மன்பதையில் கேண்மையீர்! மாண்புறுவீர்!
நன்றியினைப் படைக்கின்றேன்! நான்வணங்கி, ஏற்பீரே!
-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
அருமை ஐயா...
ReplyDeleteதங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றீ!
Deleteசுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்... சிறப்பு பகிர்வு :
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html
கவிதை கண்டேன். நல்ல கவிதை. தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றீ!
Deleteசிறப்பான கவிதை.....
ReplyDeleteபாராட்டுகள்.
கவிதை நன்றாக உள்ளது தாமதமான கருத்துக்கு வருந்துகிறேன். இந்த மெயில் எப்படியோ தவறி விட்டது தற்போது தான் பார்த்தேன்.
ReplyDeleteநன்றி ...! வாழ்த்துக்கள்....!
This comment has been removed by the author.
ReplyDeleteதங்களை வாழ்த்த எமக்கு வயது போதாது. தேன், தேன் தமிழ் சுவைத்தேன் ஐயா.
ReplyDeleteKillergee
www.killergee.blogspot.com