சுதந்திரச் சிந்தனை!
பூஞ்சோலை முதிர்வண்டாய் புகழ்பூத்த கூத்தரச!
மாஞ்சோலைக் குயில்களென மாக்கவிதை வடிப்போரே!
காஞ்சி அண்ணன் கழகஞ்சேர் நட்பினரே!
வாஞ்சையொடு யானுமிங்கு வழங்கிடற்கு நற்கவிதை
தீஞ்சுவைசேர் நற்றமிழில் ஈந்திட்டீர் வாய்ப்பதனை!
கஞ்சிகண்ட பசித்தோன்போல் கழறுவன்யான் ஈண்டு!
நெஞ்சிருக்கும் சேதியெலாம் நேர்த்தியாய் வடித்தற்கு
நஞ்சிருக்கும் கண்டத்தான் நாரணனும் நேர்காப்பே!
"வாழ்க சுதந்திரம்" என்றே ஒலித்தற்கும்,
ஆழ்ந்து மகிழ்ந்து ஏட்டினில் வடித்தற்கும்,
கீழ்மேல் இலாத பொதுமை காண்தற்கும்,
கூழ்குடில் உடையும் குன்றாக் கல்வியும்
தாழ்விலா தனைவரும் தட்டின்றி பெறுதற்கும்,
பாழ்மது தீண்டாமை கதிர்முன் பனிபோல்
அற்றிடக் காண்தற்கும், ஆனதோ சுதந்திரம்?
மற்றிதனால் "வாழ்க சுதந்திரம்" என்பேனோ?
பேச்சுச் சுதந்திரம், ஏச்சுச் சுதந்திரம்
ஆச்சு அதனால், சுதந்திரம் என்பேனோ?
எழுத்துச் சுதந்திரம் ஏளனப் பொருளாய்,
பழுதாய் ஆனதால் உரிமை என்பதுவோ?
வாக்குச் சுதந்திரம் வீணருக்கு ஆனதால்
போக்கினைக் கண்டு நோகவே ஆனது.
ஏட்டில் உள்ளது நாட்டில் காணோமே!
அயலவர் ஆட்சியில் மொழிகளின் மதிப்பு,
நம்மவர் வந்தபின் முழுமை காணலையே!
அரசியல் வாணிபம், சொத்து சேர்க்கையும்,
பதவிக்காக கொள்கை பறத்தலும், காண்கையில்
எற்றுக்குச் சுதந்திரம் என்றெண்ணிட ஆனதுவே!
வழிபடு உரிமை அழிந்திடும் போதினில்
பழியிது சூழும் ஆள்வோர் கூட்டு
கழிவது எந்நாளோ? இஃதோ சுதந்திரம்!
நீதிமன்று நடுநிலை நில்லாப் பான்மையில்,
ஆள்வோர் எண்ணமே தீர்ப்பாய் வடித்திடும்
நிலைஎண்ணில் இஃதோ சுதந்திரம் என்போமே!
சமத்துவம், சகோதரத்துவம், தேடினும்; கட்புலன்
ஆகாநிலை, சண்டையும், குருதியாறும் என்றிடில்,
என்னே சுதந்திரம்? எங்கே சுதந்திரம்?
வாழ்த்திடும் மனம் வருமோ? நெஞ்சில்
"வாழ்க சுதந்திரம்" என்றிடத் தோன்றிடுமோ?
சுரண்டல், லஞ்சம், ஊழல் கீழ்முதல்
பரந்து மேல்வரை விரவி நின்றிடல்
சுதந்திரத் திருநாடோ? சூழ்ச்சி வென்றிட
அறத்தைத் தின்றிடக் கண்டிடும் போதினிலே,
மறந்தும் வாழ்ந்திடும் எண்ணம் வந்திடுமோ?
"வாழ்க சுதந்திரம்" எனும்படி, ஏற்றங்கள்
சூழ்ந்திட மாற்றங்கள் கண்டிட, நாட்டினர்
ஆழ்ந்திட வேண்டுவன் என்சிறுநா அசைவாலே!
எல்லோரும் கற்றிட்டார் என்றநிலை, வேலையற்றோர்
இல்லை என்றிடும் ஏற்றநிலை, வகுப்புவாதம்
இனவெறி சமயச்சண்டை இங்கில்லை எனும்சேதி,
நாளெலாம் நாடெங்கும் என்றிட்டால், என் இதழ்
அசைந்து மகிழ்வாலே "வாழ்க சுதந்திரம்"
என்றிசைக்க தன்னாலே எக்களிக்கும்! இந்தநிலை
இன்றுளதோ மாநிலத்தீர்! சிந்தைக்கே விட்டிடுவேன்!
நன்றாகும் நாள்கண்டு வாழ்த்துரைக்கச் சேர்ந்திடுவோம்!
என்மனதில் பட்டதனை என்பாட்டாய் உம்மிடையே
நும்சிந்தைக்கு நேர்வைத்தேன்! நன்றுளதேல் கொண்டிடுக!
அன்றென்னில் தள்ளிடுக! அன்னைத் தமிழிங்கு
ஏற்றம்பெற, தமிழரெலாம் நேரோங்க, தமிழகமும்
முந்திநிற்க, பாரதமும் பாரினிலே முதலாக,
வந்திடுநாள் உள்ளமெலாம் உவகைபெற ஆக்குவிக்கும்!
அந்நிலைக்கு இச்சுதந்திரம் வகைசெய்தால் நாமொன்றிச்
"சுதந்திரம் வாழ்க!" என்றிடச் சேர்வோமே!
-கவிஞர் கணக்காயன்

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
ReplyDelete