மாண்புதுவை இலாச்பேட்டை சீநிவாசப் பேர்நகரில்
விண்ணூர்தி சேர்முனையச் சாலைசேர் அக்ஷயமாம்
நண்ணுவார்க்கு வேண்டுவன நாட்டமொடு ஈகின்ற
சீரடியின் சாயிபாபா நேரமர்ந்து கண்புகுந்து
உள்ளத்தே மன்னுகின்ற உன்னதத்தால் பேருவப்பே!
தள்ளரிய தேவனவன் தந்திடுக நற்காப்பே!
விள்ளரிய நல்வியாழன் சீர்விரதம் ஏற்றிட்டு
அள்ளிடுவோம் நேரருளை அன்னவனின் வாழ்த்தாலே!
-கவிஞர் கணக்காயன்(இ.சே.இராமன்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
