பொங்கல் வாழ்த்து
உழவர்
பெருநாள்!
தமிழர்
திருநாள்!
அழலனை
ஞாயிறுக் கடிசில்
படைநாள்!
உழவினுக்
குதவிய
பெருவலி
காளையும்
குழவியாம்
அஃதின்
சீரடிக்
கன்றும்
பழம்,பால்
பொங்கல்
கரும்பொடு செந்நெல்
சூழநின்
றேத்துவர்
குழலியர்,
தம்முடை
குழவியர்
சுற்றமொடு
பழகியோர்
பல்கிட
அழகாம்
இயற்கை முருகின்
அருளால்
வாழிய
நிலனே! வளத்தொடு
நீயும்!
வாழியே
நீவிர் குறள்வழி
நின்றே!
-கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)
பட உதவி:கூகிளுக்கு நன்றி!
