Tuesday, 13 December 2011

என் மனைவி வனஜாமணிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்து (12-12-1942)

மூவிருபத்              தொன்பான்சேர்          வாழ்வயது           இன்றுனக்கு!
ஆவிநிகர்                 ஈரிருவர்                      சேயர், தம்             எச்சங்கள்
ஓவியம்போல்      பேரன்மார்                  மூவரொடு,           பேத்தியர்கள்
தேவியர்கள்          நல் ஐவர்,                   ஏத்திமகிழ்             கூட்டுகின்றார்!
பூவிதய                  மாண்மருகி                 காண் இருவர்,   நேர்மருகர்
நாவினிய              ஓண்ணிருவர்            நால்வரொடு        நின்கணவர்
காவியஞ்சேர்     பாச்சொல்லால்        கண்டுரைப்பர்      வாழ்த்தினையே!
ஈவிரக்கம்            ஈகஞ்சால்                     ஒண்தியாக          நன்மனத்தால்
வாவிநீர்போல்  வண்மையால்          வாழ்ந்திடுக            ப்ல்லாண்டே!

                                                     கவிஞர் கணக்காயன் (இ.சே.இராமன்)

9 comments:

  1. இனிய பிறந்த தின நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பல்லாயிரத்தாண்டு வாழ்க வளமுடன் ....

    ReplyDelete
  3. உங்கள் மனைவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!நன்றி

      Delete
  4. அழகான வாழ்த்து கவிதை

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!நன்றி

      Delete