Friday, 9 December 2011

என் வலைபபூவின் தாய் கவிஞர் கணக்காயன்(இ.சே.இராமன்)

என்வலைப்பூ             நற்றந்தை            ஏற்றமிகு                  தில்லியிலே
அன்னவர்பேர்            வேங்கட்ரா          மன்துணைவி       ஆதிலட்சுமி
நன்றமைந்த              நேரிணையோ    நெய்வேலி              கோவையே
ஒன்றுரைத்தார்;-     "என்பேரில்          ஓர்வலைப்பூ          காணவே!"
குன்றுமணி                தன்னளவும்         யானறியா              அத்துறையைத்
தன்னார்வம்             கொண்டறிந்த       தக்கவர்ரம்              சேஷாத்ரி
குன்றனையார்        தம்மிடத்து              கூறிநின்றேன்       என்விழைவை
புன்முறுவல்             பூத்தவரும்               இன்மொழியால்   தாயானார்
தந்தையார்                ஈந்தகரு                    நற்பாண்டி              சீர்புதுவை
தன்னில்தான்          மாணுருவை          தான்பெற்று           சுற்றுலாவைத்
தென்றலெனக்        காண்கிறது              எவ்வெவரும்        தாம்கண்டு
மினனஞ்சல்            தன்வழியே              என்றனுக்குத்        தன்கருத்தைத்
தந்தென்னை           ஊக்குகின்றார்        தள்ளரிய                 நல் அமிழ்து
நன்மழைபோல்     சீரெழிலி                    நாநலத்து                மாண்குழலி
வென்றுலவு           நற்றழலன்              தேக்குகின்ற           நல்மகிழ்வை
ஐந்தான                     இப்பூவும்                  பையலென            ஈகிறது!
நன்மணிசேர்         தாமரைதான்             நற்றுணையாய் வாய்த்ததனால்
பன்னலமும்          என்றனுக்குப்            பாங்காகச்              சேர்கிறது
பொன்னணியில் நேர்பதித்த                பன்மணிபோல்     சேஷாத்ரி
நன்றமைந்த           தாயதனால்              நன்றிதனை           வைப்பேனே

                                                                      -கவிஞர் கணக்காயன்(இ.சே.இராமன்)

6 comments:

  1. வெகு நாளாயிற்று இது போன்று படித்து.
    என் சித்தப்பா புலவர் சுந்தர பாரதியின் நினைவு வந்தது தங்கள் கவிதைகளைப் படித்ததும்.

    என் வலைக்கு
    தங்களை வணங்கி வரவேற்கிறேன் அய்யா.

    ReplyDelete
  2. அன்றாட வாழ்வுதனில்,
    ஆயிரம் வலைப்பூக்கள்..
    குன்றாத தமிழினிலே,பா
    ஆயிரமிருந்தாலும்......
    மன்றாடிச் சொல்லுகிறேன்,
    மனசிருந்தால் கேளுங்கள்..
    கண்ணாடி போல் இருக்கு,
    கணக்காயர் கவிதைகள்!!!

    ReplyDelete
  3. உஙகள் கவிதை மனசுக்கு வணக்கம்.

    ReplyDelete
  4. இத்தனை நாட்கள் நாம் சந்திக்காது போய்விட்டோமே என்று இருக்கிறது ஐயா...

    இத்தனை அழகாய் நற்றமிழில் கவி பாடும் ஒருவரை வலையுலகுக்கு அறிமுகம் செய்ததில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதற்கு மகிழ்ச்சி - பெருமிதம்.

    ReplyDelete
  5. அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  6. அருமையாய் இருக்கிறது ஐயா தங்கள் பாட்டு.

    ReplyDelete