Wednesday, 7 December 2011

என் வலைப்பூவின் தந்தை

ஓர்மன்றல்       தில்லியிலே,               ஒண்விருந்து                 அன்றிரவு!
ஆர்வத்தால்    சென்றிருந்தேன்,        எந்துணையின்          சுற்றத்தார்,
ஈர்த்திட்டார்      பேரன்பால்,               இன்சொல்லால்,  புன்னகையால்!
"ஊர்கூடி            தேரிழுக்கும்                தன்மை"போல்             பல்கினரே
ஓர்மனங்கொள் நட்பினர்கள்!         ஓதிட்டால்                     பன்னூற்று
ஏர்மிக்க               மாதராரும்,                 ஏற்றங்கொள்                 ஆடவரும்,
கோர்வையாய் வாழ்த்திட்டார்,       கோலம்சால்          அந்நிகழ்வில்!
கூர்த்தமதி           வெங்கட்நா             கராசப்பேர்                    நட்பாசான்,
கீர்த்திமிகு          பண்பாளர்                  கிட்டிட்டார்!             என்றன்னை
சீர்மிக்கார்           சூழலிலே                 இன்னுறவு              யான்பெறவே,
சார்ந்திடுக         ஒண்வலைப்பூ!    சஞ்சரிப்பீர்              ஞால்மென்றார்!
சேர்ந்திடற்கு     யானறியேன்!        என்னதது                 அவ்வலைப்பூ?
தேர்ந்தநல்சொல் சிக்கனத்தால்     என் ஐயம்              போக்கிட்டார்!
என்வலைப்பூ    தந்தையாய்             என்னுளத்தே              நேர்பதிந்தார்!
என்னவகைப்     பூஈது?                       உண்வகையோ?      பூண்தரமோ?
எத்தகைத்து        இவ்வலையே?   மீனவரின்                   தோள்மேற்றோ?
நித்திரையை      மேவவிடா             பல்கொசுவின்            தடுப்போ?
என்றையம்          பல்கியது!             தாதைபோல்              நன்றுரைத்தார்!
வேங்கடத்தார்  நாகராசர்              வித்திட்டார்                  என்நெஞ்சில்!
அன்னவர்க்கு என்நன்றி!              மற்றுஅவர்                  வாழ்வலைப்பூ
நேயரெலாம்    என்னாக்கம்          கண்டுரைத்தார்         தம்கருத்தே!
பாரகத்தே           முன்னிருத்தும்    பாசமிகு                        எந்தையே!

8 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஐயா..
    தங்களைப் பற்றி வலைப்பூ, நண்பர் வெங்கட் நாகராஜ் மூலம் தெரிந்துகொண்டேன்.
    மிகவும் மகிழ்ச்சி. நானும் தமிழில் எழுதும் ஒரே இடம்.. எனது வலைப்பூதான்.
    மற்றபடி அலுவலகத்தில் ஆங்கிலமும், ஹிந்தியும்தான். வீட்டில் குடும்பத்தாருடன் தமிழ்தான் பேசுகிறேன்.
    தமிழ்நாட்டைவிட்டு வெளியே, தற்போது.

    http://madhavan73.blogspot.com
    எனது வலைமனை.. இதுதான்.
    வந்து படித்துவிட்டு நான் செய்யும் தமிழ் பிழையை திருத்த உதவுங்கள்.

    நன்றி ஐயா

    ReplyDelete
  3. //வேங்கடத்தார் நாகராசர்
    வித்திட்டார் என்நெஞ்சில்!//

    அறிவித்திட்டார் எங்களுக்கும்!

    ReplyDelete
  4. ஒரே நாளில் பதினாறு பதிவுகள் !
    எழுத்தில் உங்களுக்கிருக்கும் ஆர்வம் புரிகிறது.

    நிறைய எழுதுவதோடு நிறைவாகவும் எழுத வாழ்த்துக்கள்.

    அறிவன்

    ReplyDelete
  5. வார்த்தைச் சோதனையை-வோர்ட் வெரிபிகேஷன்- நீக்குங்கள்..இன்னும் அதிகம் பேர் கருத்துரைப்பார்கள்..

    ReplyDelete
  6. அறிவன் அவர்களுக்கு நன்றி!- தங்கள் ஆலோசனைப்படி செய்துவிட்டேன்

    ReplyDelete
  7. அட எனக்கு ஒரே வெக்கமா இருக்கு! :) ரொம்ப புகழ்ந்து தள்ளி இருக்கீங்களே...

    ReplyDelete
  8. சார் இப்படி ஒன்றை இப்பதான் முதல் முறை படிக்கிறேன்.உங்க எழுத்தின் மேலும் கொஞ்சம் பயமே வந்துவிட்டது.முன்னாளில் யாரோ புலவர்கள் எழுதிவைத்ததைதான் இப்படியெல்லாம் படித்து நானொரு அர்த்தம் புரிந்துகொள்வேன்.

    தற்கால மனிதர் ஒருவர் இப்படி எழுதியிருப்பதை இப்பதான் சார் முதலில் படிக்கிறேன்.இந்த எழுத்து முறைக்கு பேர் என்ன சார்.மிக அருமையாக இருக்கிறது,புரியும்படியும் உள்ளது.

    ReplyDelete